Monday, February 13, 2012

சென்னைப்பட்டணம்

சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தாமோதரனுக்கு பணி ஓய்வு கிடைத்ததும் மறுநாள் தனது சொந்த ஊரான அம்பாசமுத்திரம் போக மனைவியை அழைத்தார்.

``ஏங்க, நம்ம மகனுக்கும் மகளுக்கும் இப்பதான் கல்யாணமாகியிருக்கு, அவங்களுக்கு ஒரு பேரன் பேத்திய பார்க்கிறதுக்குள்ளாற ஊருக்கு போகணும்றீங்களே, வயசான காலத்துல புள்ளையிங்ககூட இருக்காம ஊருக்குப் போயி என்னத்த செய்ய?’’ சலிப்புடன் கேட்டாள் தாமோதரனின் மனைவி.

``அடி அசடு, ரிட்டயர் ஆனதுக்கப்பறம் அவங்க அவங்க சொந்த ஊருக்குப் புறப்பட்டு போயிடணும். அத விட்டுட்டு சென்னையிலேயே இருந்துட்டா, புதுசா வேல தேடி வர்றவங்களோட சேர்ந்து சென்னையோட ஜனத்தொகை ஏறிகிட்டே போயிடும். இதனால ஏகப்பட்ட ஜனநெரிசல். கெட்டும் பட்டணம் போய்ச் சேர்ன்னு சொல்வாங்க, அதுமாதிரி சம்பாதிச்சதுக்கப்பறம் திரும்பி போயிடணுமுன்னு சேர்த்துச் சொல்லணும், புரிஞ்சுதா….!’’

தாமோதரன் சொல்லி முடிக்கவில்லை அதற்குள் துணி மணிகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள், அவரோடு அம்பாசமுத்திரம் செல்ல அவரது மனைவி.

No comments: