``ஆன்டி… இந்த புடவை உங்களுக்கு சூப்பரா இருக்கு…!’’ எதிர் வீட்டு மாலா சொன்னபோது தெய்வானைக்கு முகம் மலர்ந்தது.
அன்று மாலை கல்லூரி விட்டு வரும்பொழுது வழியிலிருந்த கோவிலில் சாமி கும்பிடப்போன மாலா எதிர்வீட்டு தெய்வானை ஆன்டியைப் பார்த்ததும் வலியச்சென்று பேச்சு கொடுத்து அவர்கள் கூடவே வீடு வந்து சேர்ந்தாள்.
இரண்டு நாட்களுக்கு பிறகு தலைவேதனையில் துடித்துக்கொண்டிருந்த தெய்வானையை பார்த்ததும் தனது வீட்டிலிருந்த தைலம் எடுத்து வந்து தடவி நீவி விட்டாள் மாலா.
ஆறு மாதம் கழிந்திருந்தது. எதிர் வீட்டிலிருக்கும் மாலாவை கோவிலுக்கு அழைத்தாள் தெய்வானை. அவள் முடியாது என்று ஒரேயடியாக மறுத்தாள்.
``மாலா தலைவலிக்குது தைலம் எடுத்து வந்து தடவி விடுறியா…?’’ கேட்டும் கேட்காததுபோல் இருந்தாள் மாலா.
``இவளுக்கு என்ன ஆச்சு…!;; தன்னைத்தானே நொந்துகொண்டாள் தெய்வானை.
ஆனது இதுதான். ஆறு மாதத்திற்கு முன்பு மாலா தெய்வானையின் மகனை காதலித்து திருமணம் செய்து அவனை வீட்டோட மாப்பிள்ளையும் ஆக்கியிருந்தாள்.
2 comments:
யதார்த்தமான உண்மை! செண்டிமெண்ட் கிங்கான பால்ராசையா, நடைமுறை வாழ்க்கையை பதிவு செய்யும் இலக்கிய வாதியாகி விட்டார். அருமையான கதை.
என் வலைக்குள் வந்து செல்லும் நண்பரே உமது பாராட்டில் உதடுகளும் உள்ளமும் ஒன்றுபோல்
சிரித்துவிடுகின்றன.
Post a Comment