+2 படிக்கும் தனது மகன் அன்பரசனின் அலைபேசியைப் பார்த்ததும் அவனது தாயார் அனிதாவுக்கு சபலம் தட்டியது.
வந்திருந்த மிஸ்டுகால்களை சரி பார்த்தாள். நேற்றிரவு பனிரெண்டு மணிக்கு ப்ரியாவிடமிருந்து மிஸ்டுகால், அதைத்தொடர்ந்து அன்பரசன் திரும்ப அழைத்து முக்கால் மணி நேரம் பேசியிருக்கிறான்.
தனது கணவன் செல்வத்திடம் ஓடி வந்தாள் அனிதா.
``என்னங்க, அன்பரசன் ராத்திரியெல்லாம் யாரோ ஒரு பொண்ணுகிட்ட முக்கால் மணிநேரம் பேசியிருக்கிறான். அவன் மொஃபைல் போன் பார்த்து தெரிஞ்சுகிட்டேன், படிக்குற வயசுல இதெல்லாம் தேவையில்லையின்னு கண்டிச்சு வையுங்க!’’ அனிதா கோபமாய்ச் சொன்னாள்.
அனிதா போனதும் தனது அலைபேசியை எடுத்து நேற்றிரவு வந்துபோன மிஸ்டுகால்கள் அழைத்த கால்கள் எல்லாவற்றையும் அழித்தான் செல்வம். அன்பரசனின் அலைபேசியை குடைந்ததுபோல தனது அலைபேசியையும் அனிதா குடைந்துவிடக்கூடாதென்று.
குமுதம் 02-03-2011
No comments:
Post a Comment