‘’ ஏங்க உங்க ப்ரெண்டு ராமசாமி இரண்டாயிரம் ருபா கடன் கேட்டிருந்தாரே குடுத்திட்டீங்களா? ''தனது கணவனைப்பார்த்து கேட்டாள் ரீட்டா.
‘’ இல்ல ரெண்டு நாள் கழிச்சு குடுத்திடலாம்!’’ என்றார் அவளது கணவர் சார்லஸ்.
‘’ ஏங்க, விட்டுல பணமிருக்கு, தர்றேன்னு வாக்கு குடுத்திட்டீங்க! அப்பறம் குடுத்துடவேண்டியதுதானே! தினமும் அவரு வந்து கேட்டுட்டு போறாரு, நீங்களும் நாளைக்கு வா, நாளைக்கு வா ன்னு சொல்லி நாள கடத்தறீங்க..’’
‘’ அடிககடி கடன் கேக்கறது அவனுக்கு பழக்கமாயிடிச்சி, ஈசியா பணம் கிடைக்குறதனால இது தப்புன்னு அவனுக்கு புரியல, அதான் இழுத்தடிக்கிறேன், இப்போ அவனுக்கு கடன் வாங்கறது எவ்வளவு கஸ்டம்ன்னு புரிஞ்சிருக்கும். என்றார் சார்லஸ்.
அதே நேரத்தில் ராமசாமி தனது மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
‘’ எப்பவும் கடன் கேட்டா உடனே குடுக்கிறவரு இந்த வாட்டி இழுத்தடிக்கிறாரு, நானும் விடாகண்டனா இருக்கேன், என் தொல்ல தாங்காம இன்னும் நாள்ல குடுத்துடுவாரு பாரு!’’ என்றான் நம்பிக்கையுடன்.
1 comment:
நீங்க எழுதினது தானா இது ! நினைவில் இருக்கு !
Post a Comment