‘’ சார் உங்க கதை வார இதழ்ல் வெளிவந்திருக்கு, படிச்சேன் ரொம்ப நல்லாயிருந்தது!’’ என்று தொலைபேசியில் தனது பாராட்டை தெரிவித்தார் அந்த பிரபல எழுத்தாளரின் ரசிகர் ஜெயக்குமார்.
‘’ அப்படியா! ரொம்ப நன்றி’’ பணிவாய் சொல்லிவிட்டு கதை வெளிவந்த வார இதழின் பெயர், நாள் போன்ற தகவலை கேட்டறிந்தார் துபாயிலிருக்கும் அந்த எழுத்தாளர்.
‘’ என்னங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே உங்க நண்பர் போன் பண்ணி உங்க கதை வெளிவந்த இதழ், நாள்ன்னு எல்லா தகவலையும் சொல்லியிட்டாரே! அப்பறமென்ன எல்லார்கிட்டயும் இதே கேள்விய கேக்கறீங்க?’’ என்று முணுமுணுத்தாள் எழுத்தாளரின் மனைவி.
‘’ யாராவது என் கதையைப் படிச்சுட்டு ஆர்வமா எனக்கு போன் பண்ணி சொல்றப்போ ‘ ஆமா இந்த விஷயம் முன்னாடியே தெரியுமுன்னு சொன்னா கேக்கிறவங்களுக்கு அடடே இந்த விஷயம் முன்னாடியே அவருக்கு தெரிஞ்சிடிச்சு, நாம தான் அனாவசியமா செலவு பண்ணி பேசிட்டமோன்னு தப்பா நினைச்சிடக்கூடாதுன்னுதான் அப்படி கேக்கறேன்!’’
அவரது பதிலில் இருந்த பக்குவத்தில் சொக்கிப்போனாள் அவரது மனைவி.
No comments:
Post a Comment