ஆசிரியையான எனது மனைவி பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் என்னிடம் குமுறினாள்.
'' என்னங்க, கிளாசுல பசங்ககிட்ட எதிர்காலத்துல நீ என்ன மாதிரி வரணுமுன்னு ஆசைப்படுறேன்னு கேட்டேன், ஒருத்தன் அப்துல்கலாம் மாதிரி விஞ்ஞானியின்னு சொன்னான். இன்னொருத்தன் டாக்டர்ன்னு சொன்னான், ஆனா ஒருத்தன் மட்டும் எவ்வளவு கேட்டும் வாயை தொறந்து எதுவுமே பேசல!’’
''நிறைய டீச்சர்ஸ் சின்ன பசங்ககிட்ட இந்த மாதிரி கேள்விய கேக்குறாங்க, இனிமே யார்கிட்டயும் அந்த மாதிரி கேள்வியை நீயும் திரும்ப கேட்டுடாத!”
“ஏங்க...? நான் கேட்டது தப்பா?”
''தப்புன்னு சொல்ல முடியாது, தவிர்க்கலாம் சின்ன வயசுல நான் விஞ்ஞானியாவேன் டாக்டராவேன்னு சொல்லிகிட்டு அதையே மனசுல வளர்த்துகிட்டு வருவாங்க, எதிர்காலத்துல அவங்க குடும்ப சூழ்நிலை சரியில்லாம அவங்க ஆசப்பட்டதுமாதிரி படிக்க முடியாம போச்சுன்னா மனசு கஷ்டப்படுமில்லையா ? என்றேன்.
'ஆமா' என்று தலையாட்டினாள். என்மனைவிக்கு அந்த சிறுவனிடமிருந்த கோபம் தணிந்தது.
1 comment:
//சின்ன வயசுல நான் விஞ்ஞானியாவேன் டாக்டராவேன்னு சொல்லிகிட்டு அதையே மனசுல வளர்த்துகிட்டு வருவாங்க, எதிர்காலத்துல அவங்க குடும்ப சூழ்நிலை சரியில்லாம அவங்க ஆசப்பட்டதுமாதிரி படிக்க முடியாம போச்சுன்னா மனசு கஷ்டப்படுமில்லையா ? //
நிதர்சனமான பதில்!!!
Post a Comment