Saturday, April 18, 2009

இது எப்படி

தொலைபேசியில் தனது நெருங்கிய சொந்தக்காரர்களிடமெல்லாம் அவசரத் தேவை, பத்தாயிரம் ருபாய் கைமாத்தா கிடைக்குமா? என்று கேட்டுக்கொண்டிருந்தார் பாலு.

யாரும் பணம் தருவதாக உறுதியளிக்கவில்லை. அவரின் பரிதாப நிலை கண்டு அவர் மனைவி கேட்டாள்

“ என்னங்க, எதுக்கு எல்லார்கிட்டயும் கடன் கேக்கறீங்க, உங்களுக்கு அவசா தேவையின்னா வட்டிக்கு வாங்கி தேவையை சமாளிச்சுடுங்க!” என்றாள்.

”நான் பணம் கடன் கேக்குறதுலயும் ஒரு காரணம் இருக்கு, அடுத்த மாசத்துல என் ரிட்டையர்மெண்ட் பணம் வருது. எனக்கு பணம் வருதுன்னு தெரிஞ்சா நம்ம சொந்தக்காரங்க நான் நீயுன்னு போட்டி போட்டுகிட்டு வந்து கடன் கேட்பாங்க, அவங்க கெட்கிறதுக்கு முன்னாடி நாம அவங்ககிட்ட கடன் கேட்டு அவங்க இல்லையின்னு சொன்னா, அப்பறம் எந்த முகத்த வெச்சுட்டு நம்ம கிட்ட கடன்கேட்க வருவாங்க?”

பாலுவின் பேச்சைக்கேட்டு அசந்து போய் நின்றாள் அவர் மனைவி.

No comments: