Thursday, February 5, 2009

உயிரினும் ஓம்பப்படும்

திருமண பந்தியில் அமர்ந்து சாப்பிட்டு முடித்து முருகேசன் இலையை எதிர் திசையில் மடக்க முயற்சிக்கவும், அருகிலிருந்த செந்தில் தடுத்தான்.

"இலைய எதிர் திசையுல மடக்கினா உறவு வேண்டாமுன்னு அர்த்தம். உள் பக்கமா மடக்கின உறவு வேணுமுன்னு அர்த்தம் என்றான் செந்தில்.

"சரி இலைய மடக்காமலேயே விட்டுட்டா? என்று எதிர்க் கேள்வி கேட்டான் முருகேசன்.

"மடக்காம விட்டுட்டா நீ திருப்தியா சாப்பிட்டுட்டன்னு அர்த்தம் என்றான்.

முருகேசன் சட்டென்று இலையை தூக்கி எடுத்து கொண்டு வந்து இலை போடும் இடத்தில் போட்டு விட்டு கை அலம்பிவிட்டு,

"இதுக்கு ஏதாவது காரணமிருக்கா?" என்றான்.

"இலை எடுக்க ஆட்கள் இருக்கும் போது நீயே எடுத்துட்டு வந்தியே. உன் கிட்ட அடுத்தவங்களுக்கு உதவி பண்ற மனிதாபிமானம் இருக்குன்னு அர்த்தம்!" என்ற போது அசந்து போனான் முருகேசன்.
குமுதம் வார இதழில் வெளிவந்தது

No comments: