Friday, January 23, 2009

சாதுர்யம்

கோவை செல்லும் தனியார் சொகுசு பேருந்தில் மனைவியை அனுப்பிவைத்துவிட்டு நான் ஆபீஸ் போன அரை மணி நேரத்தில் மனைவியிடமிருந்து மிஸ்ட் கால். உடனடியாக என் மொபையிலிருந்து தொடர்பு கொண்டேன்.
''ஹலோ இன்ஸ்பெக்டர் அங்கிளா ? நல்லாயிருக்கீங்களா அங்கிள்? எங்கேயிருந்து பேசறீங்க? சேலத்துலயிருந்தா? சேலத்துல என்ன பார்க்க வர்ரீங்களா, வாங்க அங்கிள் பஸ் சேலம்கிட்டே வரும்போது உங்களுக்கு கால் பண்றேன் தாங்ஸ் அங்கிள், மாமிய கேட்டதாச் சொல்லுங்க!'' என்று பேசி இணைப்பை துண்டித்தாள் என் மனைவி.
எனக்கு எதுவும் புரியவில்லை . மறுபடி அவள் கோவை போய் சேர்ந்தபின் ராத்திரி ஒன்பது மணிக்கு போன் செய்தாள்.
'' என்னங்க பஸ்ஸுல எனக்கு பின் ஸீட்டுல உட்கார்ந்திருந்தவன் சரியில்லை, ஜாடை மாடையா பேசுறதும், டீஸ் பண்றதுமா இருந்தான் அதான் அப்படி பேசினேன் அதுக்கப்புறம் அவன் கப்சிப்னு ஆயிட்டான் நானும் தொந்தரவு இல்லாம நிம்மதியா வீடு வந்து சேர்ந்தேன். அவளது சாதுர்யம் கண்டு அசந்து போனேன்.

ஆன்ந்த விகடன் வார இதழில் வெளிவந்தது

1 comment:

கோகுலன் said...

ஹா ஹா,.. இது நல்ல டெக்னிக் ஸார்..