அந்த தெருவின் குறுக்குச் சந்து வழியாக நானும் நண்பர் குமாரும் டூ-வீலரில் சென்று கொண்டிருந்தோம்.
ஆள் நடமாட்டம் இல்லாத அந்த குறுக்குச் சந்துக்குள் நுழைந்த போது எண்பது வயது முதியவர் கீழே விழுந்து எழுந்திருக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்.
தூரத்தில் பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு '' யாராச்சும் ஓடி வாங்களேன், பெரியவர் கீழே விழுந்துட்டாரு!’’ என்று உரக்க சத்தமிட்டான் குமர்ர். அவனின் சத்தம் கேட்டு சிலர் வேகமாய் சென்று அந்த முதியவரை தூக்கி முகத்தில் தண்ணீர் தெழித்து ஆசுவாசப்படுத்தினார்கள். நண்பன் குமார் மீது கடுப்பாகிப்போனது எனக்கு.
'' அந்த பெரியவர நாம ரெண்டு பேரும் நெனச்சா தூக்கி உதவி பண்ணியிருக்க முடியாதா? மனிதாபிமானமே இல்லாம நடந்துகிட்டியே!’’ என்றேன்.
குமார் மெல்லியதாய் புன்னகைத்துவிட்டுச் சொன்னான்.
'' நாம டூவீலர அவர் பக்கத்துல நிறுத்தி அந்த முதியவர தூக்கி உதவி பண்ணியிருந்தா அத பார்க்கிறவங்க நாம தான் அவர்மேல வண்டிய மோத விட்டோமோன்னு சந்தேகமா பார்ப்பாங்க, மனிதாபிமானத்துல உதவி பண்ணப்போயி பழி நம்ம மேல விழுந்திடக்கூடாதுன்னுதான் அப்படி கூப்பிட்டேன்.
குமுதம் வார இதழில் வெளிவந்தது
No comments:
Post a Comment