Wednesday, November 7, 2012

லாஜிக்


தரகரோடு பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையையும் அவர்கள் குடும்பத்தையும் வரவேற்று ஹாலில் அமர வைத்து பஜ்ஜி சொஜ்ஜி எல்லம் கொடுத்து உபசரித்தபிறகு காபி கோப்பைகளோடு வந்த தன் பெண்கள் இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள் தாயார் மரகதம்.

``இவ என் மூத்த மக பேரு மாலா, இவளத்தான் நீங்க பொண்ணு பார்க்க வந்திருக்கிறீங்க, இவ என் ரெண்டாவது பொண்ணு பேரு தீபிகா, காலேஜ்ல பி.காம் ஃபைனல் ஈயர் படிக்குறா!..’’

தரகர் ஒரு நிமிடம் குழம்பிப்போனார் பொண்ண கூட்டி வந்து மாப்பிள்ளைக்கு அறிமுகப்படுத்துறது ஓ.கே, எல்லா வீடுகள்லயும் நடக்குற விஷயம் தான், எதுக்கு தன்னோட ரெண்டாவது பொண்ண அறிமுகப்படுத்தணும், ஒருவேள மூத்த பொண்ண மாப்பிள்ளைக்கு பிடிக்காம ரெண்டாவது பொண்ண பிடிச்சிருக்குன்னு சொன்னா அவளையே பேசி முடிச்சிடலாமுன்னு பார்க்கிறாங்களா..?

நல்லவேளையாக மாப்பிள்ளைக்கு மூத்தவள் மாலதியை பிடித்துப்போக தரகருக்கு நிம்மதி வந்தது. மாப்பிள்ளை வீட்டார் வெளியேறியதும் தரகர் கேட்டார்.

``எதுக்கு உங்க ரெண்டாவது பொண்ணையும் அறிமுகப்படுத்தினீங்க…?

``சில மாப்பிள்ளையிங்க அக்காள பார்க்க வந்துட்டு தங்கச்சிய பார்த்ததும் மனசு திடமில்லாம மாறிடுவாங்க, இப்ப வந்த மாப்பிள்ளையும் திடமான புத்தியுள்ளவரா இல்ல சந்தர்ப்ப வாதியான்னு செக்பண்ணத்தான் அப்படி செஞ்சேன்!..’’ 

மாப்பிள்ளையை எடை போட இப்பிடி ஒரு லாஜிக்கா என்று வியந்தார் தரகர்.

No comments: