வீட்டுச்சுவரில் மாட்டியிருந்த ஓலைப்பெட்டியைப்
பார்த்ததும் ஆச்சரியப்பட்டு அதை எடுத்து தரும்படி தனது தாத்தா மகாலிங்கத்திடம்
கேட்டான் இளமதியன். மகாலிங்கம் எடுத்து தந்தார்.
``தாத்தா…இதுமாதிரி புதுசு வாங்கி குடுங்க
தாத்தா..!’’ ஆர்வமாய் கேட்டான் இளமதியன்.
``இது இப்போ கிடைக்கிறதில்லப்பா,…அந்த காலத்துல
பனைமரம் ஏறி ஓலை வெட்டி போட்டு அந்த ஓலையில பெட்டி செய்தாங்க, இப்போ பனை மரம்
ஏறுறவங்க கிடைக்காததினால ஓலைப்பெட்டி முடையிற தொழில யாரும் செய்யறதில்ல!’’
விளக்கம் சொன்னார் மகாலிங்கம்.
``அந்த தொழில் செஞ்சவங்க இப்போ வருமானத்துக்கு
என்ன செய்வாங்க…?’’ மறுகேள்வி கேட்டான் இளமதியன்.
``வேற ஏதாவது தொழில் செய்து
புழைச்சிக்குவாங்க…!’’
``இதுமாதிரி தானே தாத்தா பட்டாசு தொழிலும்,
வயிற்றுப்பொழப்புக்கு பட்டாசு தொழில் செய்யறாங்க, இந்த தொழிலே இல்லாம போனா அவங்க
வேற தொழில் செஞ்சு பொழைச்சிக்குவாங்க. உயிருக்கு ஆபத்தான பட்டாசு தொழில் மூலமா பல
பேருக்கு வேல கொடுக்கிறதா நெனச்சுகிட்டு பட்டாசு தொழில நடத்தறீங்களே, அத
நிறுத்தக்கூடாதா…?
அவனது கேள்வியில் ஒரு நிமிடம் மெளனமாகி பட்டாசு
தொழில் நடத்தும் எண்ணத்தை கைவிட தீர்மானித்தார் மகாலிங்கம்.
குமுதம் - 03-10-12
No comments:
Post a Comment