Thursday, February 10, 2011

முடியல!

இருபது வருடங்களுக்கு முன்பு என்னுடன் படித்த நண்பனை எதோச்சையாக பேருந்து நிலைய வளாகத்தில் சந்தித்தேன். முகத்தில் சுருக்கம் விழுந்து தலையில் பாதி முடி நரைத்திருந்தது. இன்னும் அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற விபரம் கேட்டபோது மனசு கஷ்டமாக இருந்தது. இருவரும் தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டு பிரிந்தோம்.

அன்றிரவு நண்பனை சந்தித்த விபரத்தை என் மனைவியிடம் சொல்லி வருத்தப்பட்டேன்.

‘’ நம்ம பொண்ணு படிக்கிற ஸ்கூல்ல கூட ஒரு டீச்சருக்கு இன்னும் திருமணம் ஆகலை, வயசு முப்பத்தைந்துக்குமேல இருக்கும!” என்றாள் என் மனைவி. எனக்கு பொறி தட்டியது.

மறுநாள் அந்த டீச்சரை சந்தித்து எனது நண்பனைப்பற்றி எடுத்துச்சொல்லி, `ஏன் நீங்க ரெண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது?’ என்று கேட்டேன். ரொம்ப நேரம் யோசித்துவிட்டு இறுதியில் சம்மதிக்க, விபரத்தை நண்பனுக்கு தெரிவித்து உடனே ஸ்கூலுக்கு வரச்சொன்னேன்.

அடுத்த அரைமணி நேரத்தில் வந்த அவனுக்கு டீச்சரை காண்பித்து `பிடிச்சிருக்கா’ என்று கேட்டேன்.

‘’ டீச்சர் பார்க்கிறதுக்கு எனக்கு அக்கா மாதிரி தெரியறாங்க, வயசு குறைவா வேற பொண்ணு இருந்தா பாரேன்!’’ அவன் சொன்னபோது எனக்கு தலை சுற்றியது.

4 comments:

சுந்தரா said...

முடியல...முடிச்சிருக்கிறவிதம் அருமை.

காணக்கிடைக்கிற யதார்த்தமும்கூட.

Anonymous said...

உதவி செய்யும் போது இது போன்ற அனுபவங்கள், உதவி செய்யும் மனப்பான்மையை குறைத்து விடும்.அது சரி... ஏன் பதிவுகளை குறைத்து விட்டீர்கள்?

arasan said...

எனக்கும் முடியல சார் ...

arasan said...

கற்பனை நச்