Sunday, September 12, 2010

அட்சய திருதியை



நகைக்கடையில் அட்சய திருதியை தினத்தன்று கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு கிராம் கம்மல் வாங்கிவிட்டு, கடையை விட்டு வெளியேறியபோது தங்கம்மையின் முகத்தில் மகிழ்ச்சி துளிர்த்திருந்தது.

வீட்டுக்கு வந்ததும் தனது மகளின் காதில் அணிவித்து திரும்பத் திரும்ப அழகு பார்த்தாள். பக்கத்து வீட்டு சரசுவுக்கு கம்மலைக் காட்டியபோது அவள் முகத்தில் மகிழ்ச்சிக்குப் பதிலாக பொறாமை வந்தேறியது.

`` ம், இன்னைக்கு நகை வாங்குனா நகை பெருகுமுன்னு யாரோ சொன்னத நம்பி ரொம்ப சிரமப்பட்டு நகை வாங்கியிருக்க, இதெல்லாம் நகைகள அதிகம் விக்கிறதுக்கு நகைக்கடைக்காரங்க செய்யற புது டெக்னிக்!’’ தனது அதிருப்தியை வெளிப்படுத்திய சரசுவை ஏற இறங்கப்பார்த்தாள் தங்கம்மை.

`` சரசு, தீபாவளி பண்டிகை வருது, கையில காசு இல்லாட்டியும் கடன் வாங்கியாவது புது டிரெஸ், பட்டாசு, ஸ்வீட் வாங்கி சந்தோஷப்படுறோமில்லையா? அதுமாதிரிதான் இதுவும், ஒரு சந்தோஷத்துக்காக வாங்ககிறமே தவிர நகை பெருகுமிங்கற எண்ணத்துல வாங்கல!’’

தங்கம்மை சொன்னபோது சரசுவுக்கு இருப்பு கொள்ளவில்லை. வீட்டிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு நகைக்கடைக்கு விரைந்தாள் நகை வாங்க.

2 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

இடைவெளிகள் said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திருமதி ராமலக்ஷ்மி.