Wednesday, September 8, 2010
நெனப்பு
அந்த பொக்கைவாய் முதியவர் உடல் தள்ளாடியபடியே ரயில் பெட்டியில் ஏற மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் நின்றிருந்த சாந்தகுமார் அவரை பின்பக்கத்திலிருந்து தாங்கியபடி அலுங்காமல் ரயில் படிக்கட்டுகளில் ஏற்றி அவரது கரம் பிடித்து இருக்கைக்கு அழைத்து வந்தான்.
`` நடக்கிறதுக்கு இவ்வளவு சிரமப்படுறீங்களே கையுல ஒரு கைத்தடி வெச்சிருந்தா நடக்க சௌகரியமா இருக்குமில்லையா?’’ அவரது பரிதாப நிலையை உனர்ந்தபடி கேட்டான் சாந்தகுமார்.
`` ரெண்டு வருஷத்துக்கு முன்னால வரைக்கும் என் மனைவிதான் என்ன தாங்குனா, ஒரு கைத்தடி மாதிரி எங்க போணுமுன்னாலும் அவதான் என்ன கூட்டிக்கிட்டு போவா, அப்பறம் அவ இறந்துட்டா, அவ போனதுக்கப்பறம் யார் உதவியுமில்லாம என்னோட தேவைகள நானே பூர்த்தி செஞ்சுட்டு வர்றேன், என் மனைவி இறந்துட்டாலும் இப்பவும் அவ என்ன கைத்தாங்கலா கூட்டிகிட்டு வர்றது மாதிரியே தோணுது, அவ நெனப்புல வாழுற நான், கைத்தடி உபயோகப்படுத்தினா என் மனைவி என்கூட இருக்குற நெனப்பு இல்லாமபோயிடும்’’
அந்த தள்ளாத வயதிலும் தன் மனைவிமீது வைத்திருக்கும் அவரது ஆழ்ந்த காதலை நினைத்து ஆச்சரியமானான் சாந்தகுமார்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Super sentiment... Kalakkunga...Kalakkunga..
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு எஸ்.ஏ சரவணகுமார் அவர்களே.
அருமையான தாங்கல். கதை பேசுகிறது. வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்கு நன்றி. ஒரு எழுத்தாளனுக்கு முதலில் மகிழ்ச்சி தருவது அவனது படைப்பு வெளியாகும்போது, அடுத்து அதை படிக்கும் நண்பர்கள் பாராட்டும்போது,இந்த ஒரு பாராட்டு போதும் ஒரு நூறு கதை எழுத ஆர்வத்தை கிளப்பிவிட்டுச்செல்லும்
Post a Comment