Tuesday, February 16, 2010

வசதி

அந்த முதியோர் இல்லத்தின் தோட்டத்தில் நட்டிருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த வரலட்சுமி அம்மாவின் அருகில் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான் கதிரேஷன்.

" அம்மா, இங்க நீங்க சந்தோஷமா இருக்கீங்களா? இங்க உங்களுக்கு எல்லா சவுகரியங்களும் இருக்கா? தாழ்மையான குரலில் கேட்ட கதிரேசனை உடைந்த பார்வையால் ஏறிட்டாள் வரலட்சுமி.

" இங்க சவுகரியத்துக்கு ஒரு குறையும் இல்ல, என் மகனுக்கு வெளிநாட்டுல வேல கிடைச்சதுன்னு என்ன இங்க கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டான், என் கடைசி காலத்துல என் மகன் கூட இருந்து அவனோட அன்பையும் பாசத்தையும் அனுபவிக்குற பாக்யம் கிடைக்கலேங்கற சின்ன வருத்தம் மனசுக்குள்ள இருக்கத்தான் செய்யுது!"

தனது அடி மனதில் படிந்து கிடந்த வருத்தத்தை கதிரேசனிடம் பகிர்ந்து கொண்ட போது வரலட்சுமியின் கண்கள் லேசாய் கலங்கியிருந்தன.

கதிரேசன் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான். வெளிநாட்டிற்க்குச் சென்று வேலை பார்க்க தனக்கு கிடைத்த வாய்ப்பையும், தனது தாயாரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவது என்ற முடிவையும் நிராகரித்துவிட்டு தனது தாயாரோடு வாழ்வதே பாக்யம் என்ற எண்ணத்தோடு வீட்டுக்கு நடந்தான் கதிரேசன்.

குமுதம் 24.02.2010

4 comments:

Jerry Eshananda said...

வாழ்த்துகள் நண்பரே.

திருவாரூர் சரவணா said...

குட்டிக்குட்டி கதையா நல்லா எழுதுறீங்க. வாழ்த்துக்கள்.

மும்பையா புனேயா என்று நகரத்தின் பெயர் நினைவில் இல்லை. ஒரு கடையில் குமுதம் வாங்கிவிட்டு பழம் வாங்கலாம் என்று சென்று வருவதற்குள் அங்கே குண்டு வெடிப்பு நிகழ்ந்தது என்று குமுதத்தில் கட்டுரை வெளிவந்திருந்ததே. அது நீங்கள் தானே?

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அழகான கதை! உங்களின் கதைகள் தொடர்ந்து குமுதத்தில் வெளிவருவது மகிழ்வாக இருக்கிறது. ஒருபக்க கதைகளில் நீங்கள் ஒரு சுரங்கமாக இருக்கிறீர்கள்!

இடைவெளிகள் said...

நன்றி திரு ஜெரி ஈசானந்தா, திருவாரூரிலிருந்து சரவணன் மற்றும் நெல்லை எஸ் ஏ சரவணகுமார். உங்களது பாராட்டுக்கள் தான் என்னை இதுபோல் பல கதைகள் எழுத தூண்டுகிறது. திருவாரூர் பாபு நீங்கள் குறிப்பிட்ட குண்டுவெடிப்பு நிகழ்ச்சி குஜராத்தில் நடைபெற்றது, அதை இன்னமும் நீங்கள் நினைவில் வைத்திருப்பது மற்றுமொரு மகிழ்ச்சி.

நன்றி