ரயில் வண்டியில் நானும் என் மனைவியும் அமர்ந்திருக்க,எதிரில் இரண்டு வயது குழந்தையும் அதன் பெற்றோரும் அமர்ந்திருந்தனர்.
குழந்தை என் மனைவியிடம் ஒட்டிக்கொள்ள, தனது கைப்பையிலிருந்து பிஸ்கெட் பாக்கெட் ஒன்றை எடுத்து குழந்தையிடம் நீட்டவும், நான் ’தராதே” என்று பார்வையால் அதட்டினேன். அது அவளுக்கு சங்கட்த்தை ஏற்ப்படுத்த, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருந்தாள்.
அடுத்த நிறுத்த்த்தில் குழந்தையும் பெற்றோரும் இறங்கியதும் என் மனைவி கேட்டாள்.
“ குழந்தை எவ்வளவு அன்பா என்கூட பழகிச்சு, ஒரு கவர் பிஸ்கெட் தந்தா குறைஞ்சா போயிடுவேன்!” சற்று கோபமாகவே கேட்டாள் என் மனைவி.
” ரயில் பயணங்கள்ல சாப்பிடுற பொருள்ல மயக்க மருந்து தடவிக் குடுத்து பணத்தையும் பொருளையும் திருடிகிட்டு போற இந்தக் காலத்துல, நீ பிரியமா பிஸ்கெட் தரப்போயி அதுல மயக்க மருந்து தடவியிருக்குமோன்னு ஒரு நிமிஷம் குழந்தையோட அப்பா அம்மா சந்தேகப்பட்டுட்டா நிலமை என்னாகும் யோசிச்சு பாரு, அதான் தராதேன்னு தடுத்தேன்!” என்ற போது அவள் முகத்தில் பரவிக்கிடந்த கோபம் விலகி புன்னகை படர ஆரம்பித்த்து.
கல்கி 01.03.09
No comments:
Post a Comment