Wednesday, January 20, 2010

அக்கறை

பெங்களூருக்கு வந்து சேர்ந்த தனியார் பேருந்திலிருந்து தனது மனைவி குழந்தகளுடன் இறங்கினான் மகேஷ். அவனைச்சுற்றி ஆட்டோ டிரைவர்கள் ஈ மாதிரி மொய்த்தார்கள்.

“ ஜே.சி ரோடு போகணும் எவ்வளவு?”

“ முப்பத்தஞ்சு ரூபா ஆகும் சார்!”

“ இருபத்தஞ்சு ரூபா குடுக்கிறேன் வர்றீங்களா?”

“ என்ன சார் நீங்க... பார்க்கிறதுக்கு டீசண்டா இருக்கீங்க, பத்து ருபாய்க்கு பேரம் பேசறீங்களே!”

“ இருபத்தஞ்சு ரூபாய்க்கு வர்றதா இருந்தா வா, இல்லையின்னா வேற ஆட்டோ புடிச்சுக்கறேன்!” தீர்மானமாகச் சொன்ன மகேஷை ஏளனமாகப் பார்த்தான் டிரைவர்.

“ என்ன்ங்க...ஐ.டி கம்பெனியில மாசம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கறீங்க, பத்து ரூபாய் தானே அதிகம் கேக்கறான் குடுத்துடவேண்டியதுதானே!” யதார்த்தமாய் கேட்டாள் மகேஷின் மனைவி.

“ குடுத்துடலாம்... ஆனா, வசதி வாய்ப்பு இல்லாதவங்க்கிட்டயும் ஆட்டோகாரங்க இதையே கேட்பாங்க, அவங்களால இதுமாதிரி குடுக்க முடியுமா?” தனது கணவனின் கேள்வியில் புதைந்திருந்த சமுதாய அக்கறையை நினைத்து ஒரு கணம் ஆச்சரியமானாள் அவனது மனைவி.

குமுதம் 20.01.10

No comments: