Wednesday, December 2, 2009

சாமர்த்தியம்

எழுத்தாளர் செல்வம் தனது நண்பன் கேசவனை தொலைபேசியில் அழைத்தபோது அவன் குளியலறையில் இருந்தான். சமையலறையிலிருந்து ஓடி வந்து ஃபோனை எடுத்தாள் அவனது மனைவி தாரிகா.

” ஹலோ யார் பேசறீங்க?”

“நான் எழுத்தாளர் செல்வம் பேசறேன், கேசவன் இருக்காரா?”

“ அவர் குளிச்சுட்டு இருக்காரு, ரெண்டு நிமிஷத்துல வந்துடுவாரு, உங்களப்பத்தி என் வீட்டுக்கார்ர் அடிக்கடி சொல்வார், நீங்க ரொம்ப நல்லா கதை எழுதுவீங்கன்னு.”

“ ரொம்ப நன்றிங்க!”

“பரவாயில்லைங்க, இதோ என் வீட்டுக்கார்ரே வந்துட்டாரு!” ரிசீவரை தனது கணவனிடம் தந்துவிட்டு சமையலறைக்குள் நடந்தாள் தாரிகா.

கேசவன் ஃபோன் பேசிவிட்டு தனது மனைவியிடம் கேட்டான்.

“ இந்த நண்பரைப்பற்றி இதுவரைக்கும் உன்கிட்ட நான் எதுவுமே சொல்ல்ல, அப்பறம் எப்படி அவரைத் தெரிஞ்சது மாதிரி பேசுன?”

”உங்க நண்பர் உங்கள கேட்டப்போ யாரோ செல்வமாம் உங்க்கூட பேசணுமாம் அப்படியின்னு நான் சொல்லியிருந்தா அத கேக்குற உங்க நண்பர், இவ்வளவு பழக்கமிருந்தும் நம்மளப்பற்றி ஒரு வார்த்த கூட வீட்டுல சொல்லி வைக்கலியேன்னு உங்க மேல வருத்தப்படக்கூடாதுன்னுதான் அப்படி பேசினேன்!” மனைவியின் சாமர்த்தியம் கண்டு ஆச்சரியமானான் கேசவன்.

3 comments:

Jawahar said...

ஒரு சின்ன ஐடியாதான், ஆனா அதில இத்தனை சுவாரஸ்யம், இவ்வளவு பெரிய படிப்பினையா!

http://kgjawarlal.wordpress.com

இடைவெளிகள் said...

தங்களின் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி.

ராஜவம்சம் said...

அரைப்பக்க கதையிலும் ஒரு மெஸேஜ்

தொடரட்டும் வாழ்த்துக்கள்