Tuesday, September 8, 2009

தாய்வீடு

சனிக்கிழமைதோறும் தனது தாய் வீட்டுக்குப் போக வேண்டும் என்று அடம்பிடிக்கும் தனது மனைவி ஆனந்தியை கோபத்தில் முறைத்தான் தீபக்.

''வாரம்தோறும் உன் அம்மா வீட்டுக்குப் போகணுமுன்னு அடம்பிடிக்கிறியே! அப்படி அங்க என்னதான் இருக்கு, அங்க இருக்கிற வசதியைவிட ரெண்டு மடங்கு வசதி இங்க இருக்கு. வேற என்ன சுகமிருக்குன்னு அம்மா வீட்டுக்குப் போக ஆசப்படுற! சற்றே மிதமான கோபத்தில் கேட்டான் தீபக்.

''அய்யோ நான் வசதியா இருக்க ஆசப்பட்டு ஒண்ணும் போகலிங்க. உங்களுக்கே தெரியும். என் தம்பி காதல் திருமணம் பண்ணிக்கிட்டு அவன் மனைவிய எங்கம்மாகிட்ட விட்டுட்டு வெளிநாடு போயிட்டான்.எங்கம்மா எதுக்கெடுத்தாலும் என் அண்ணிகிட்ட எரிஞ்சு விழுந்து சண்டை போடுவாங்க. இதனால் அண்ணிக்கு நிம்மதியே இல்லாம போச்சு! நீங்களும் நானும் வாரத்துல ரெண்டு நாள் அம்மா வீட்டுல இருந்தா, வீட்டுல மருமகன் இருக்கிறார்ங்கற எண்ணத்துல எங்கம்மா அண்ணிகிட்ட எதுவும் பேசாம இருப்பாங்க. அந்த ரெண்டு நாளாவது அண்ணி நிம்மதியா இருப்பாங்கள்ல....''தனது அண்ணி மீது வைத்திருக்கும் பாசத்தை அறிந்து மாமியார் வீட்டுக்குப் புறப்படத் தயாரானான் தீபக்.

2 comments:

சேவியர் said...

எப்படி தலைவரே இப்படியெல்லாம் யோசிக்கறீங்க :D

சேவியர் said...

நல்லா இருக்கு !