புத்தக கண்காட்சி பற்றிய துண்டு பிரசுரத்தை கை நிறைய வைத்துக்கொண்டு கடற்கரைக்கு வருவோர் போவோருக்கு ஒவ்வொன்றாக தந்துகொண்டிருந்தான் சரத்.
யாரும் அதை வாங்கிப் படிப்பதாக இல்லை. அவன் கண்முன்னாலேயே கீழே போட்டுவிட்டு கடற்கரை நோக்கி நடந்தார்கள். சரத்துக்கு மனம் வலித்தது.
பிரசுரத்தை எல்லோரும் படிக்கிறமாதிரி என்ன செய்யலாம் என்ற நினைப்போடு வீட்டுக்கு வந்தான். சட்டென்று ஒரு யோசனை வர பிரிண்டிங் பிரஸ்சில் மீதமாகிப்போன சம்பளக் கவர்களை சேகரித்து ஒவ்வொரு பிரசுரத்தையும் மடித்து கவருக்குள் போட்டு, மறுநாள் மாலை கடற்கரைக்கு எடுத்துச் சென்றான்.
ஒவ்வொருவருக்கும் கவர் ஒன்றை நீட்ட உள்ளே ஏதோ இருக்கு என்று பிரித்துப் படிக்க சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனான் சரத்.
No comments:
Post a Comment