Monday, April 6, 2009

ஜோக்ஸ்

"மன்னர் ஏன் புலவரை நையப் புடைக்கிறார்?''
" கொற்றவா, புறமுதுகிட்டு ஓடிவர கற்றவான்னு பாட்டு எழுதி வந்துட்டாராம்!''
******
" நிலவுல நாம எப்போ போகப்போறோமுன்னு மன்னர் அடிக்கடி கேட்கிறாரே ஏன்?''
" எதிரி மன்னன்கிட்டயிருந்து தப்பிச்சு கொஞ்ச நாள் அங்க போய் ஒழிஞ்சிருக்கலாமுன்னுதான்!''
****************
" மன்னா இந்த முறை போர்களத்துலயிருந்து புறமுதுகிட்டு ஓடிவந்து தப்பிக்க முடியாது!''
" ஏன் முடியாது?''
" எதிரி மன்னன் இந்த முறை நம் அரண்மனை முன்பு போர்க்களம் அமைக்க திட்டமிட்டுள்ளானாம்''
******************
" மன்னா எதிரி மன்னன் சேரன் செங்குட்டுவன் ரொம்ப பொல்லாதவர், புறமுதுகிட்டு ஓடினால் அவரும் ஓடி வந்து தங்கள் தலையில் ணொங்கென்று கொட்டிவிடுவார்''
" அதனாலதான் அவர் பெயர் சேரன் செங்-குட்டுவனா!''
**************
" இளவரசர் அந்தப்புரம் நுழையிறப்போ புது சினிமா பாட்டு பாடிகிட்டு போறாரே என்ன பாட்டு?''
" டாடி மம்மி வீட்டில் இல்ல, தட போட யாருமில்லங்கற பாட்டுத்தான்!''
****************
" செய்தி ஓலை இப்படி கனக்கிறதே அப்படியென்ன அந்த புறமுதுகுப்புலி எழுதியுள்ளான்!''
" போரை தவிர்க்கவும் ங்கற சின்ன விசயத்த நிறைய அடித்தல் திருத்தலோட எழுதி முடிக்கிறப்போ ஓலை அதிகமாச்சு மன்னா!''
***************
" நம் மன்னரின் கோபம் இன்னும் அடங்கவில்லை!''
" ஏன், என்ன நேர்ந்தது?''
" புறமுதுகிட்டு ஓடி வரும்பொழுது மன்னர் கால் இடறி விழுந்துட்டாராம், அவர தாண்டி ஓடுன வீரர்கள் யாரும் அவர கண்டுக்கலையாம்!''
***************
" நம்ம மன்னருக்கு நாய் அடி, பேயடி, பாய் அடி கிடைச்சுதாம்!''
" அதென்ன பாய் அடி?''
" ஒருநாள் மட்டும் மகாராணிய பாயில படுக்கச் சொல்லீட்டு மன்னர் கட்டுல்ல படுத்தாராம், மகாராணி பாயாலே சாத்து சாத்துன்னு சாத்திட்டாங்களாம்!''
**************
" மன்னா பஸ்ஸுலதான் ரிவேர்ஸ் வரமாட்டீங்க, போர்களத்திலயுமா, வாங்க ஓடியிடலாம்!''
" நல்ல வேள ஞாபகப்படுத்தின, இந்தா ஓட ஆரம்பிச்சுட்டோமுல்ல!''
**************
" நமது மன்னர் நடிகர் விஜய்ய சந்திக்கனுமுன்னு விருப்பப்படுறாரே ஏன்?''
" வில்லு மாதிரி வந்து எதிரி மன்னன போட்டுதள்ள முடியுமான்னு கேட்கிறதுக்குத்தானாம்!"
***************
" ஆற்காட்டார் கத்திய தூக்கிகிட்டு மீன் சந்தைக்கு போறாரே ஏன்?"
" மின்வெட்டு இருக்கிறப்போ மீன்வெட்டும் இருக்கட்டுமேன்னுதானாம்!"
***************
" தலைவர் ஏடாகூடமா கேள்வி கேட்டு வம்புல மாட்டிகிட்டாரு!"
" அப்படி என்ன கேட்டுட்டார்!"
" பிரிஞ்சிருந்த ரெண்டு குடும்பமும் ஒண்ணு சேர்ந்திடிச்சு, ரெண்டு டீ.வி எப்போ ஒண்ணு சேரப்போவுதுன்னு கேட்டுட்டாராம்!"
*****************
" எதுக்கு அந்த காமடி நடிகர ஹீரோயின் போட்டு அடிக்கிறாங்க?"
" தனக்கு சிக்ஸ் பேக் இருக்குன்னு சொல்றதுக்கு பதிலா செக்ஸ் பேக் இருக்குன்னு சொல்லீட்டாராம்!"
****************
" எனக்கு புடிச்ச நடிகை ஷா ஷா ஷா ன்னு மூணு தடவ எழுதியிருக்கியே யாருப்பா அந்த நடிகை!"
" த்ரி-ஷா தான்”
****************
" போஸ்ட் மாஸ்டர் பொண்ண காதலிச்சது தப்பாப் போச்சு!"
" ஏன் என்னாச்சு?"
" லேசா ஒரசினா ஸ்டாம்பு மாதிரி ஒட்டிக்கிறா!"
ஐரேனிபுரம் பால்ராசய்யா

1 comment:

டக்ளஸ்....... said...

\\எதுக்கு அந்த காமடி நடிகர ஹீரோயின் போட்டு அடிக்கிறாங்க?"
" தனக்கு சிக்ஸ் பேக் இருக்குன்னு சொல்றதுக்கு பதிலா செக்ஸ் பேக் இருக்குன்னு சொல்லீட்டாராம்!"\\

இத மட்டும் நான் சத்தியமா படிக்கவே இல்லை..
நான் ரொம்ப நல்ல பையனாக்கும்..