“நம்ம பக்கத்து வீட்டு பார்வதியோட புருஷன் மும்பையிலிருந்து தினமும் போன் பண்ணி குறஞ்சது பத்து நிமிஷமாவது பேசுவாராம் தினமும் அவகிட்ட பேசலையின்னா அவருக்கு தூக்கமே வராதாம், என் வீட்டுலயும் என் புருஷன் வெளியூருல இருக்கிறாரு, வாரத்துல ஒரு தடவ மட்டுந்தான் பேசறாரு” தனது தோழி மாலதியிடம் புலம்பிக்கொண்டிருந்தாள் ரேவதி.
மாலதிக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
“உன் புருஷனால உனக்கு நிம்மதி அத நெனச்சி சந்தோஷப்படு” என்று சொன்ன மாலதியை வெறுப்புடன் பார்த்தாள் ரேவதி.
“உனக்கொரு விஷயம் தெரியுமா, பார்வதியோட புருஷன் தினமும் போன் பண்ணுறது அவள திட்டுறதுக்குக்தான், அவர் ஒரு சந்தேகப்பேர்வழி, அடிக்கடி போன் பண்ணி பார்வதி வீட்டுல இருக்காளா இல்ல ஊர் சுற்ற போனாளாண்ணு பார்கிறதுக்குத்தான் அடிக்கடி போன் பண்ணிகிட்டே இருப்பாராம்”
மாலதியின் பேச்சை கேட்டு “என் புருஷன் பரவாயில்ல “என்று தனக்குத்தானே பெருமை பட்டுக்கொண்டாள் ரேவதி.
No comments:
Post a Comment