Wednesday, July 21, 2010

ட்ரீட்

திருமண பதிவு அலுவலகத்துக்கு தனது காதலி ரம்யாவை ரகசியமாக அழைத்துவந்த அவளது தோழி மாலாவையும் தனது நண்பர்களையும் நன்றிப் பெருக்கோடு பார்த்தான் சுனில்.

`` மாலா, ஜெயன், ஸ்டீபன், முருகன் ராஜா நீங்க நினைச்சதால தான் எங்க காதல் வெற்றி பெற்று இன்னைக்கு கல்யாணத்துல முடிஞ்சிருக்கு, இந்த காதல் வெற்றிய நாம எல்லோரும் சேர்ந்து கொண்டாடலாம், எந்த ஹோட்டலுக்குப் போலாம்!’’ மகிழ்ச்சி பொங்கச் சொன்னான் சுனில்.

`` அதெல்லாம் வேண்டாம்டா, நீங்க சந்தோஷமா வாழ்ந்து காட்டணும் அது போதும், அவனது நண்பன் ஜெயன் அவனது கையை அழுத்தமாய் குலுக்கியபடியே சொன்னான்.

``சுனில் காதல் கைகூடி இன்னைக்கு பதிவுத்திருமணம் பண்ணீட்டதால உங்க காதல் வெற்றியடைஞ்சதா நினைச்சு டீரீட் குடுக்க ஆசைப்படுற, இதே சந்தோஷத்தோட கடைசி வரைக்கும் வாழ்ந்து காட்டு, அப்பத்தான் உங்க காதல் வெற்றி அடையும், நீங்க குழந்தைகள் பெற்று உங்களுக்கு வயசாகி அறுபதாம் கல்யாணம்னு ஒண்ணு வருமே, அப்ப குடுடா ட்ரீட்!’’ உணர்ச்சிபூர்வமாக சொன்ன மாலாவை அச்சரியமாகப் பார்த்து சரியென்று தலையாட்டினான் சுனில்.

2 comments:

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

யதார்த்தமான அழகான கதை! சிறிய, சிறிய நடைமுறை செண்டிமெண்டை வைத்துக்கொண்டு அழகாக எழுதுகிறிர்கள்! வாழ்த்துக்கள்!!

சி.பி.செந்தில்குமார் said...

மாவட்டத்தில் ஒரு கிராமமான ஐரேனிபுரம் எனும் ஊர். பிறந்த மண்ணை பிரிந்தாலும் மண்ணின் பெயர் பெயரில் நிலைத்திருப்பதில் பெருமை கொள்கிறேன்=உங்கள் பெருமை அருமை.