Sunday, June 13, 2010

பழசு

பத்து வருடங்களுக்கு முன்பு வாங்கிய மொபைல் நம்பரை இன்னமும் மாற்றாமல் உபயோகித்துக்கொண்டிருந்தான் தனசேகரன்.

புது ஸ்கீம், குறைந்த கால்சார்ஜ், நிறைய வசதியென்று எத்தனையோ சலுகைகள் பிற கம்பெனிகள் அறிவித்தபிறகும் தனசேகரன் மட்டும் மாறவே இல்லை.

அலுவலகத்தில் அவனுடன் பணிபுரியும் பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானாலும் அதெற்க்கெல்லாம் புன்னகை ஒன்றை மட்டுமேபதிலாகத் தந்துவிட்டு நகர்ந்துவிடுவான்

``என்ன சார் நீங்க, இன்னும் அந்த பழைய எண்ணையே வெச்சிருக்கீங்க, அத மாத்துறதுக்கு உங்களுக்கு மனசே வராதா? அப்படியென்ன அந்த எண் மேல ஒரு பிரியம்?’’ அலுவலகத்தில் அவனுடன் வேலை பார்க்கும் சந்திரன் கேட்டதுதான் தாமதம் தனசேகரனுக்கு கண்கள் நிறைந்தது.

``இந்த மொபைல் நம்பர் ஏழாவது படிச்சுகிட்டு இருந்த என் மகன் தான் செலக்ட் பண்ணி வாங்கினான், அவனுக்கு இந்த நம்பர் அத்துப்படி, ராத்திரி தூக்கத்துல கேட்டாலும் சொல்வான், ஒரு நாள் அவன் காணாம போயிட்டான், இன்னமும் திரும்ப வரல, என்னைக்காவது ஒருநாள் இந்த நம்பர்ல போன் பண்ணுவான்ங்கற நம்பிக்கையுலதான் இந்த நம்பர மாத்தாம வெச்சிருக்கேன்!’’ கண்கள் கலங்க தனசேகரன் சொல்லி முடித்தபோது அவனோடு சேர்ந்து அழவேண்டும் போலிருந்தது சந்திரனுக்கு.

6 comments:

திருவாரூர் சரவணா said...

இந்தக் கதை குமுதத்தில் வெளிவந்தபோதே வாசித்திருக்கிறேன். நெகிழ்ச்சியான கதை. வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் said...

சுருக்கமா...உருக்கமா இருக்கு
பதிவுக்கு பாராட்டுக்கள்.

கே. பி. ஜனா... said...

விழிகளை நனைத்த கதை. மிக அருமை.

இடைவெளிகள் said...

அன்பான தி.சரவணன் தங்களின் பாராட்டு என்னை பரவசப்படுத்தியது நன்றி.

இடைவெளிகள் said...

அன்பு நண்பர் திரு சி.கருணாசு அவர்களே உங்களின் பாராட்டில் நனைகிறேன்.

இடைவெளிகள் said...

திரு கே.பி சார், தங்கள் வருகையும் வாழ்த்தும் என்னை நெகிழ வைக்கிறது, நன்றி. நாகர்கோவில் வரும்பொழுது நேரில் சந்திப்போம்