Tuesday, March 16, 2010

மீசை

முருகேசனுக்கு வயது நாற்பது கடந்தபோது தலையிலிருந்த முடிகளும் தொலைந்து முன்பக்க வழுக்கையில்தான் முதலில் வெளிச்சம் விழத் தொடங்கியது.

வழுக்கை முருகேசன் என்ற பட்டப் பெயர் அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் அவருக்குத் தெரியாமலேயே அவருக்கு போடப்பட்டிருந்தது.

வழுக்கை முருகேசன் இன்னும் வரல...! அலுவலக பியூன் சக ஊழியரிடம் சொல்வதைக் கேட்டுக் கொண்டுவந்த முருகேசனுக்கு மூடு அவுட் ஆக, தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்து ஒட்டிக்கெக்ள அன்றிரவு தனது மனக்கவலையை தனது மனைவியிடம் பகிர்ந்து கொண்டார் முருகேன்.

"என்னங்க, உங்களுக்கு தலையுலதான் வழுக்கை. மீசை பலமா இருக்கு. பேசாம அசல் அஜீத் மீசை மாதிரி வளர்த்துக்குங்க. பார்க்குற யாருக்கும் முதல்ல உங்க மீசைதான் தெரியும். அப்புறம் பாருங்க உங்கள எல்லோரும் மீசை முருகேசன்னு கூப்பிடப்போறாங்க. இல்லாத ஒண்ணுக்காக வருத்தப்படுறதைவிட இருக்குற ஒண்ணவெச்சு சந்தோஷப்படலாமில்லையா?"

தனது மனைவியின் தன்னம்பிக்கை வார்த்தைகளில் கட்டுண்டு மீசை வளர்க்க ஆரம்பித்தார் முருகேசன்.

kumudam 08.03.2010

1 comment:

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

ஆஹா அருமை! இயலாமையின் புதிய கோணம், புது நம்பிக்கையோடு.. .. உங்கள் எழுத்து நிச்சயம் உங்களை முன்னணி எழுத்தாளர்கள் வரிசைக்கு விரைவில் உங்களை அழைத்து செல்லும்! வாழ்த்துக்கள்!