ஓய்வு பெற்ற தனது தந்தை வீட்டில் சும்மா இருந்தால் மனதளவில் சோர்ந்து விடுவார் என நினைத்து அவருக்கென்று பர்னிச்சர் மார்ட் என்ற வியாபாரத்தை தனது சொந்த முதலீட்டில் ஏற்படுத்தி தந்தான் ரமேஷ்.
முதல் மூன்று மாதங்கள் வரை எந்த வியாபாரமும் நடக்காமல் வாடகைப்பணமும் அலுவலகச் செலவும் சேர்ந்து நஷ்டத்தில் நடப்பதாக பகுதி நேர கணக்காளர் சொன்னபோது ரமேஷ் எந்தவித கவலையும் அடையவில்லை.
“ சும்மா இருந்தா அப்பாவுக்கு பொழுது போகாதுன்னுதான் பிசினஸ் வச்சுக்கொடுத்தேன் போகப் போக சரியாயிடும்!” தனக்கு ஆதரவாகப் பேசிய தனது மகனை ஒரு கணம் நினைத்துப் பார்த்தார்.
ரமேஷ் படிப்பு முடிந்து வேலை இல்லாமல் இருந்தபோது அவனுக்கு கம்பியூட்டர் சென்டர் ஆரம்பித்து தந்தபோது அவன் சரிவர கவனிக்கவில்லையென்று 'இவன் எதுக்குமே லாயக்கில்லை, தண்டம்' என்று காட்டுகத்தலாய் திட்டியது நினைவுக்குவர ஒருகணம்தன்னைத்தானே நொந்துகொண்டார், மகன் அதுபோல் திட்டாமல் பெருந்தன்மையோடு நடந்துகொண்டதை நினைத்து.
4 comments:
உங்க 'பிசினஸ்' கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
பிசினஸ் என்றவுடன் எதையோ நினைத்து வந்தேன்.ஆனால் இது ஏமாற்றிவிட்டது.
அழகான கதை. ஓரு பக்க கதைகளில் நீங்கள் கெட்டி என்பதை இக் கதை உறுதிப்படுத்துகின்றது.
உங்களது ஓரு பக்க கதைகளை ஓன்லைனில் வாசிக்க முடியுமா ப்ளீஸ்.
நல்லா இருக்கு சார்.
Post a Comment