Friday, October 17, 2008

துணை

கோவையில் தனது நண்பனின் அறையில் தங்கிக்கொள்ளலாம் என்று ஆர்வத்துடன் வேலை தேடி வந்த ஜேக்கப்பிற்கு அது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. கோவைக்கு வெளியே பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் எண்ணூறு ருபாய் வாடகையில் தண்ணீர் வசதி, கழிவறை வசதி, இல்லாத அறையில் தங்கியிருந்தான் அவனது நண்பன் வினோ.

மறுநாள் காலை தனது பெட்டி படுக்கையுடன் புறப்பட்டு லாட்ஜில் தங்கிக்கொண்டான். ஒரு வாரம் கழிந்து வினேவை பார்க்க வந்த்தான் ஜேக்கப்.

‘’பஸ்டேண்டு பக்கத்துல சகல வசதியோட ஒரு வீடு இருக்கு, வாடகைய நாம ரெண்டு பேரும் பகிர்ந்துக்கலாம் வர்றியா” தனது
நண்பனைப் பார்த்து கேட்டான் ஜேக்கப்.

“ நான் வரலை’’ என்று மறுத்தான் வினோ.

’’ மாசம் பத்தாயிரத்துக்கு மேல சம்பளம் வாங்கற ஒரு நல்ல வீடாப்பாத்து இருக்ககூடாதா? சற்று கோபமாகவே கேட்டான் ஜேக்கப்.

’’இருக்கலாம் தான், ஆனா இந்த வீட்டு ஓணரோட அப்பா ரொம்ப வயசானவர், அவர்கூட அவர் மகனோ, மருமகளோ, பேரக்குழந்தைகளோ சரிவர பேசுறதில்ல, அவரோட பேச்சுதுணைக்கு நான் ஒருத்தன் தான் இருக்கேன், நானும் விட்டுட்டு போயிட்டா பாவம் அவர் ரொம்ப கஷ்டப்ப்டுவார்’’

பெரியவருக்கு துணையாக இருக்கும் வினோவை பாராட்டிவிட்டு வந்த வழியே திரும்பி நடந்தான் ஜேக்கப்.

No comments: